சீரற்ற காலநிலை காரணமாகத் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியாத கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மாத்திரமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து உயர்தர பரீட்சார்த்திகளையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
