உயிர்த்த ஞாயிறு விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை உடனடியாக வெளியிடவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 131 ஆவது நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து எதிர் கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் தனக்கு உண்மை தெரியும் என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயலுக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிய நான் உட்பட 220 இலட்சம் மக்கள் காத்திருக்கின்றோம்.

எனவே இனியும் தாமதிக்காமல் உயிர்த் தியாகம் செய்த அப்பாவி மக்களுக்காக உண்மையை வெளிப்படுத்துமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கவுள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்” இவ்வாறு  எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!