களனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) விடுதி ஒன்றில் மாணவியொருவர் திடீரென சுகவீனமுற்றதை அடுத்து இந்த மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டம் அமைந்துள்ளது.
இந்த மாணவன் மொனராகலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சமூக விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
மேலும் விடுதி நிர்வாக அதிகாரியின் கவனக்குறைவாலும் வைத்தியசாலையில் அனுமதிக்க அம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.