ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்துப் போலியான தகவல்களைப் பரப்பி இனமுரண்பாடுகளைத் தோற்றுவிக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொட்டிஹாவத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.