யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த 29 வருடங்களாக நிலைகொண்டருந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியறி வருகின்றனர்.
தனியாருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளதையடுத்தே இராணுவ முகாமைப் படிப்படியாக அகற்றும் பணி இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகாம் அமைந்துள்ள காணி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட் கற்கோவளம் கடற்கரையுடன் அமைந்ததாகும். மூன்று சகோதரர்களுச் சொந்தமான இந்தக் காணியை இரு தடவைகள் இராணுவ முகாமுக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அரசியல் தலைவர்கள், காணி உரிமையாளர்களுடன் இணைந்து போராடி அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


