புதிய அமைச்சரவை சற்று முன்னர் பதவியேற்பு!

இலங்கையின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை 22 அமைச்சர்களைக் கொண்டமைகிறது.  நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிற்றல் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதியின் நேரடித் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரியவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ஏனைய 21 அமைச்சர்களின் விபரம் வருமாறு:

1. கலாநிதி ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர்.

2. விஜித்த ஹேரத் – வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.

3. ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்.

4. சந்தன அபேரத்ன – உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் அமைச்சர்

5. சரோஜா சாவித்திரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

6. கே.டி. லால்காந்த – விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர்.

7. அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்.

8. சுனில் குமார கமகே – இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர்

9. இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்.

10. உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர்.

11. சுனில் ஹந்துன்னெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்.

12. ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்.

13. பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்.

14. கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்.

15 பேராசிரியர் ஹினிதும சுனில் செனாவி – புத்தசாசன, சமயவிவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.

16. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்.

17. வசந்த சமரசிங்க – வர்த்தக, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்.

18. பேராசிரியர் கிரிஷாந்த சில்வா – விஞ்ஞான மற்றும் தொழில் நுட்பவியல் அமைச்சர்.

19. குமார ஜயகொடி – சக்தி வலு அமைச்சர்.

20. கலாநிதி தம்மிக பட்டபதி – சுற்றாடல் அமைச்சர் .

21. அனில் ஜயந்த பெர்ணாண்டோ – தொழில் அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!