தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்…!

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் துச்சக்கர வண்டி பயணம் கடந்த 19ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்பதை வலியுறுத்தியும் மோசமான காலநிலையினையும் பெருமளவானோர் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தை  தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற் சந்திப்பும் நடைபெற்றது.

அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்புஇஅடக்குமுறை மற்றும் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதி பற்றிய தேவையினையும் எடுத்துக்கூறப்பட்டதோடுஇ எமது நிலைப்பாடு சார்ந்த மனுவும் போராட்டகாரர்களால்  ஐரோப்பிய ஒன்றியப் பிரதிதிநிகிகளிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் பங்களிப்போடு துச்சக்கர வண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!