உள்ளூராட்சி வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு யோசனை முன்வைப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்ததனவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பான யோசனையை முன்வைத்திருந்தனர் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தமது இணக்கப்பாட்டை அறிவித்தனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தல் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுவதால் உள்ளூராட்சி மன்றங்களின் எதிர்கால நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இவ்வாறான பிரேரணையை சமர்ப்பிப்பது தொடர்பில் தமது அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

இது அமைச்சின் ஆலோசனைக் குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனை மாத்திரமே எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!