நவம்பர் 25ஆந் தேதி உயர்தரப் பரீட்சை: போலி தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும், எந்தக் காரணங்களுக்காகவும் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்த கொண்ட அவர், 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்டபடி எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரப்பப்படும் போலி தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், தவறான செய்திகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் எனவும் அவர் பரீட்சார்த்திகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்படும் பரீட்சைக்கான நேர அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறும், பரீட்சைகள் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்கள் தவிர்ந்த ஏனைய சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!