உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றக் காவலில் தடுத்து வைக்குமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஒன்லைன் விசா மற்றும் விண்ணப்ப நடைமுறைகளைத் தனியார் மயப்படுத்துவது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது உச்சநீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையை நடைமுறைப்படுத்தத் தவறியமை நீதிமன்ற அவமதிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை இலங்கை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டியவை நீதிமன்றச் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது.