காலமான கலா மாஸ்டர்! யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

யாழில் நடைபெற்ற ஹரிகரனின் இசைநிகழ்விற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த கலா மாஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

” பிணக் குவியலின் மேல் மானாடி மயிலாடியவளே…

இறந்த பெருச்சாளி கட்டுமரத்தின் கைக்கூலியே… ”

மனமில்லால் யார் உன்னை இங்கு அழைத்தது” எனவாறு வசனங்கள் எழுத்தப்பட்ட சுவரொட்டிகள் யாழில் பொது இடங்களில் இன்று காலையில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன்.

2009 தமிழர்களிற்கெதிரான இனப்படுகொலை தீவிரமடைந்திருந்த நிலையில் தமிழக மக்கள் எழுச்சியடைவதை தடுப்பதற்காக கருணாநிதியுடன் இணைந்து மானாட மயிலாட நிகழ்வு நடத்திய கலா மாஸ்டர் மீது கடும் விமர்சனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பங்குபற்றுவதாக இருந்த நடிகை குஸ்பு விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள என குறிப்பிட்டு பேசியதற்காக கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் தனது யாழ்ப்பாண பயணத்தை நிறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!