பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்புந்தி (Ambunti)  பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரலில் இதுபோன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பப்புவா நியூ கினியாவில் பதிவாகியது .
குறித்த நிலநடுக்கத்தினால் 07 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!