நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக முதற் சுற்று வாக்குப்பதிவின் படி 13 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இதுவொரு அபரிமிதமான வெற்றி ஆகும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொடரும் இரண்டாம் சுற்று வாக்கெண்ணும் பணிகள் முடிவடைந்து, அனுரகுமார திசாநாயகவின் வெற்றி உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மிகவும் எளிமையான முறையில் புதிய ஜனாதிபதியின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், தற்காலிகமாக ஜனாதிபதியின் செயலாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன், 15 அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமனங்களும் வழங்கப்படவுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.