நடைபெற்று முடிந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முதலாவது சுற்று முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று மாலை 05:25 மணியளவில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. விருப்பு வாக்கு எண்ணிக்கை இல்லாமல் ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை இந்த உத்தியோக பூர்வ அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

