மாமனிதா் ரவிராஜின் நினைவு நிகழ்வு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள அவரது நினைவுச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாமனிதர் ரவிராஜின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து,தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அரசியல் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிசோர், மாமனிதா் ரவிராஜின் உறவினர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் எனப் பலா் கலந்து அmஞ்சலி நிகழ்வில் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!