ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இடைநிறுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடியிருந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தமது உறுப்பினராக அதன் கடமைகளை கடுமையாக மீறுகிறது என்று தீர்மானித்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதன் விவகாரங்களை சுயமான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்பதுடன், நிர்வாகம், ஒழுங்குமுறையில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிடுகிறது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் உடன் அமுலாகும் வகையில் அதன் உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.