யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா,வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, யாழ்ப்பாண இந்திய துணை தூதரக அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.