மீகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்!

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த கடையில் கொள்ளையிட வந்தவர்களினாலேயே இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதேவேளை கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!