யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் 5 மாவட்டங்களினதும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலரால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக மாகாண ஆளுநர் நியமிக்கப்படுவது மரபாகும். வடக்கு மாகாண ஆளுநராக கடந்த மாதம் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை. இதனால் வடக்கின் 5 மாவட்டங்களிலும் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வடக்கின் 5 மாவட்டங்களினதும் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலரால் மாவட்டச் செயலகங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.