யாழ்ப்பாணம் – வலி. வடக்கு, தையிட்டியில் இராணுவத்தினரால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை எதிர்வரும் பொசனன் பூரணை தினத்தன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தையிட்டிப் பகுதியில் இராணுவத்தினரால் பொது மக்களுக்குச் சொந்தமான காணியில் அனுமதி எதுவும் பெறப்படாமல் சட்ட விரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரைக்கு அண்மையில் கலசம் வைக்கப்பட்டது. எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி பொசனன்று விகாரையைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.