யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும், அவரது வாடிக்கையாளர்கள் 10 பேரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான பெண், யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாகக் குடு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.