எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விலைக்குறைப்பின் அடிப்படையில் ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும். ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 465 ரூபாவாகவும், ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மண்ணெண்ணையின் விலை லீற்றர் ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.