யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான பகுதி 34 வருடங்களுக்குப் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.250 கிலோமீட்டர் தூரமான இந்த வீதி இன்று காலை 6.00 மணி முதல் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து அச்சுவேலி, தோலகட்டி வரையிலான பகுதியே பொதுமக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு முதல் இராணுவ நடவடிக்கை காரணமாக மூடப்பட்ட இந்த வீதியில் நீண்ட காலமாக படையினர் நிரந்தர வீதித் தடை அமைத்துக் காவல் கடமையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை வீதியில் காணப்பட்ட வீதித் தடைகள் அகற்றப்பட்டு பொது மக்கள் போய் வர அனுமதிக்கப்பட்டனர்.