13 ஐ விட அதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்து!

பதின்மூன்றாம் திருத்தத்துக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பக்கிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தென்பகுதியில் இருந்து பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமதக் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே,  பௌத்த பிக்குகள் உட்பட்ட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!