யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ். நகரில் கடைகள் பூட்டப்பட்டு, சன நடமாட்டமின்றி நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர நாளைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, தமிழர் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்தருந்தனர்.
இதனால் யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சன நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுள்ளன. தனியார் பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை.