வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான விலையில் இருபத்தைந்து வீதமான பணத்தைச் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
‘வியத்புர’ வீட்டுத் திட்டத்திலிருந்து வீடுகளை கொள்வனவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் வியத்புர வீட்டுத் திட்டம் ஒரு சமூக நலத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகிறது. இதன் மூலம், வீட்டு உரிமையை மேம்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.

