ஊடக நிறுவனங்கள் நிபந்தனைகளை மீறினால் அனுமதி பத்திரம் ரத்து

நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள், ஊடக அமைச்சின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நிபந்தனைகள் மீறப்படும் சந்தர்ப்பதில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் தற்காலிக அனுமதிப்பத்திரமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சௌக்கிய அண்டஹெர – 2025” கௌரவிப்பு விழா, அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று 29ஆம் திகதி சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!