“முழு நாடும் ஒன்றாக” செயல் திட்டத்தில் 945 பேர் நேற்று கைது

நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும், “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் திகதி 945 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கைது செய்யப்பட்டவர்களில் 16 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

17 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடம் இருந்து 637 கிராம் ஐஸ், 285 கிராம் ஹெரோயின், 3 கிலோகிராம் 432 கிராம் கஞ்சா செடிகள் மற்றும் ஏராளமான பிற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!