சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் பீடி இலைத் தொகையுடன் வென்னப்புவ பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வென்னப்புவ மா ஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
626 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 17 பொதிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என சந்தேகிக்கப்படும் 60,000 பக்கற்றுகள் அடங்கிய 20 பொதிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
