எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் விசேட அறிவிப்பு

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் உரையாற்றும் போதே இவ் விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய உலக விவகாரங்களுக்கான சபையில் முக்கிய உரையை நிகழ்த்தியிருந்தார்.

அதில் அந்நாட்டின் ஊடகவியலாளர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!