லசந்த கொலையில் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது!

லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் காலியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று 26ஆம் திகதி காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேகநபர் காலியில் வைத்து வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், காலி ஹியாரே பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய நாள் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் காலி மற்றும் மாத்தறை பகுதிகளுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சந்தேகநபருக்கு ரூ. 20,000 கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!