இந்தியாவில் நடைபெற்று வரும் 4காவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று 25ஆம் திகதி நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியை அவர் 13.90 வினாடிகளில் நிறைவு செய்து இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்திய வீரர் இந்தப் போட்டியை 13.78 வினாடிகளில் நிறைவு செய்திருந்தார்.
மற்றுமொரு இந்திய வீரர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
