கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே கடந்த 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது, பொலீஸ் அதிகாரி ஒருவர் போத்தலால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், களுத்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு விசாரணைக்கு முன்னதாக நீதிமன்றத்துக்கு முன்னால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று கூடியிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று களுத்துறையில் வைத்துச் சந்தேக நபரைக் கைது செய்து கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
