யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் பாம்புக்கடிக்கு இலக்கானதன் காரணமாகவே மரணமடைந்ததாக சடலம் உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டுக்கருகில் மர்மான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த 27 வயதான செல்வச்சந்திரன் மிமோஜன் எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
மீட்கப்பட்ட இவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பாம்பு தீண்டியதிலையே இளைஞன் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது .
