தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்ளைக்கு அமைவாக – கொள்கை மறுசீரமைப்புக்கு வசதி செய்யும் வகையில் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவைகளில் அங்கம் வகிக்கும் வெளிவாரி உறுப்பினர்களை இராஜினாமா செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் பேரவை உறுப்பினர்களையும் பதவி விலகக் கோருவதெனக் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன அனைத்துப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களையும் தாமாகப் பதவி விலகுவதாகக் கடிதங்களை வழங்குமாறு பதிவுத் தபால் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சகல பேரவை உறுப்பினர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிலை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.