முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டயானா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்தே பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.
டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான
வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாளக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான டயானா கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணைப் பிறப்பிருந்தமை குறிப்பிடத்தக்கது.