கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகச் சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உட்படச் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விவாதத்துக்காக அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இதனை மன்றுக்கு அறிவித்தார்.