“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரண்டு பயணிகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 6 கிலோ 630 கிராம் நிறையுடைய “குஷ்” போதைப்பொருளின் பெறுமதி ரூ. 60 மில்லியன் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபர் ஒரு இராணுவ வீரர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய அவர், ஹம்பாந்தோட்டை, கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது சந்தேக நபர், அம்பாறை மஹா ஓயாவைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார். அவர் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
முதலாவது சந்தேக நபர் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டார் என்று விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
