யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பிறந்து சில நாள்களே மதிக்கத்தக்க, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குழந்தை ஒன்று கிணற்றினுள் மிதப்பதைக் கண்ட ஊரவர்கள் பொலீஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, சாவகச்சேரி பொலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
குழந்தை இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.