வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

இதையடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!