நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக யார் தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனுவையில் வாக்களித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல்களுக்காக அரசாங்கம் 40 பில்லியனை செலவிடவேண்டும் என்பதால் புதிய ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்வார் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலுக்கான செலவு மாத்திரம் பத்து பில்லியன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மாகாணசபைகள், உள்ளூராட்சித் தேர்தல்களுக்காக மேலும் பத்து பில்லியனைச் செலவிடவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த செலவுகளுடன் புதிய ஜனாதிபதி பொருளாதாரத்தை கையாள்வது, பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்குவது போன்றவற்றில் பெரும் சவால்களை எதிர்கொள்வார். நான் அரசியலில் இருந்து ஒய்வுபெறவில்லை. ஆனால் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்.
– என அவர் தெரிவித்தார்.