பிரான்ஸ் இளைஞனுக்கு அதிர்ச்சி கொடுத்த கிளிநொச்சி யுவதி – பணம், நகைகளை வாங்கிவிட்டு தலைமறைவு..!

கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு பழகியுள்ளனர்.

தனது பெற்றோர் போரில் உயிரிழந்த நிலையில் தனது மூத்த சகோதரியுடன் தான் வாழ்ந்து வருவதாக பிரான்ஸ் இளைஞரிடம் யுவதி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவு, திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதிக்கு இளைஞன் 60 இலட்சம் ரூபா பணம், 42 பவுண் நகை, பரிசுப் பொருட்கள் என்பனவற்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இதன்பின்னர் குறித்த இளைஞன் கிளிநொச்சிக்கு வந்த போது யுவதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

தலைமறைவாகியுள்ள யுவதி தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!