வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது மற்றும் எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை உயிரிழந்துள்ளதுடன்,
தாய் மற்றும் தந்தையும் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
விபத்தில் வெல்லவாய ஆனபல்லம பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையொன்றே உயிரிழந்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி வெல்லவாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.