ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் !

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முழு அளவிலான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு சென்ற ரிச்சர்ட் ஆர்.வர்மா, அதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

கொழும்பில் மூத்த அதிகாரிகளுடன் அவர் மேற்கொள்ளும் சந்திப்புகள் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா பார்வையிடவுள்ளார்.

கொழும்பை ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு 553 மில்லியன் டொலர் நிதியுதவி மூலம் இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா ஆதரவை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!