வேகக்கட்டுப்பாட்டையிழந்து கடையினுள் புகுந்த கார் – விசுவமடுவில் சம்பவம்!

முல்லைத்தீவு பரந்தன் A.35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன்  நோக்கி பயணித்த கார் இன்றைய தினம் மாலை 5.40 மணியளவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது வேககட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி தள்ளி கடையினுள் புகுந்துள்ளது.

இவ்விபத்தில் எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!