அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் போலி இலக்கத் தகடினை கொண்ட ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் குறித்த குற்றச் செயலினை புரிய சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொகு பெடி என்ற நபரின் வழிகாட்டுதலின் பேரில் சந்தேகநபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்ள வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது