எகிறிய மரக்கறிகளின் விலைகள்! பசியில் வாடும் மக்கள்!

வியாபாரிகள் தீர்மானித்த மரக்கறிகளின் விலையை விவசாயிகளின் தீர்மானத்திற்கேற்ப கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை ரூ.2,500 ஆக உயர்ந்து வரலாற்றில் பதிவான அதிகூடிய விலையை பதிவு செய்துள்ளது.

மேலும் போஞ்சி, கறி மிளகாய், வெண்டைக்காய், லீக்ஸ் மற்றும் கோவா போன்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், காய்கறி விலையை நிர்ணயிப்பவர் விவசாயி என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!