யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம்!

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இந்தப் புதிய அலுவலகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைத்தார். அலுவலகத்தின் பெயர்ப் பலகை மற்றும் நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கா, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் உட்படப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!