அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததனால் 11 பள்ளிச் சிறுவர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது. சம்பவத்தில் காயமடைந்த 11 முன்பள்ளி சிறுவர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று புதன்கிழமை காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக் கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி கவிழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.