அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை மற்றும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் கருத்துக்களும் ஆராயப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தெழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளதாக தொழில்சார் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.